LATEST NEWS
“நீங்கள் சோகமா இருந்தது உலகத்துக்கே தெரியும்..!” – ஆடியோ லாஞ்ச் வீடியோவை பகிர்ந்து விஜய்யை வறுத்தெடுத்த திமுக..!!
கரூர் வெண்ணெய்மலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் பேசும்போது, கரூரில் முன்பு நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்குத் தன் மீது பழிபோட முயன்றதாகக் காவல்துறையினர் மற்றும் அரசு மீது குற்றம் சாட்டினார். இச்சம்பவத்திற்குப் பிறகு தான் வீட்டில் மிகுந்த வேதனையுடன் இருந்ததாகவும், ஆனால் தான் ஓடி ஒளிந்து கொண்டதாகப் பொய்க் குற்றச்சாட்டுகளைப் பரப்பினார்கள் என்றும் அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
விஜய்யின் இந்த உருக்கமான மற்றும் ஆவேசமான பேச்சுக்குத் திமுக ஐடி விங் சமூக வலைதளங்களில் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. அவர் வீட்டில் சோகமாக இருந்ததாகக் குறிப்பிட்டதை எள்ளி நகையாடும் வகையில், மலேசியாவில் நடைபெற்ற அவரது ‘ஜனநாயகன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் நடனமாடிய வீடியோவை பகிர்ந்து விமர்சித்துள்ளது.
அதிமுக, திமுக மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இப்பதிவில், “நீங்கள் சோகமாக இருந்தது உலகத்துக்கே தெரியும்; ஆடியோ லாஞ்ச், சீமந்த விழா, பிறந்தநாள் என எத்தனை ‘சோக’ காட்சிகளைப் பார்த்தோம்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கவுண்டமணி–சத்யராஜ் கூட்டணியின் புகழ்பெற்ற “அடங்கப்பா… இது உலக மகா நடிப்புடா சாமி!” என்ற நகைச்சுவை மீம்ஸையும் இதனுடன் இணைத்து திமுகவினர் விஜய்யைச் சாடியுள்ளனர்.
