LATEST NEWS
தமிழக அரசியலில் கிளம்பிய புதுப்புயல்..! வாய் திறந்தா கூவம் சாக்கடை தான்..! விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக..!!!
தமிழகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ‘ஹீரோ போல பஞ்ச் டயலாக் பேசுகிறேன்’ என்று வாயைத் திறந்தாலே கூவம் ஆற்றின் சாக்கடைத் தான் வெளியே வருகிறது என்று அதிமுகவின் முக்கிய நிர்வாகியான ஆர்.பி. உதயகுமார் மிகக் கடுமையான முறையில் விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் கரூரில் விஜய் பேசிய பேச்சு குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஆர்.பி. உதயகுமார், அந்தப் பேச்சு “ஆணவத்தின் உச்சம்” என்று சாடியுள்ளார். விஜய்யின் அரசியல் பேச்சுகளும் அணுகுமுறையும் முதிர்ச்சியற்று இருப்பதாக அவர் தனது கண்டனத்தை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
கோடிக்கணக்கான தொண்டர்களின் மனம் புண்படுகிற வகையில், திமுகவும் அதிமுகவும் “கூட்டுக் களவாணிகள்” என்று ஒரு களவாணி சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். திராவிடக் கட்சிகளை ஒரே தட்டில் வைத்துப் பேசிய விஜய்யின் கருத்துக்கு அவர் இவ்வாறு தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
