LATEST NEWS
“மக்களே!.. இதை மட்டும் பண்ணுங்க’.. டாஸ்மாக் கடைகளை மூட அண்ணாமலை சொன்ன அந்த ஒரு ஐடியா.. தமிழக அரசியலை உலுக்கும் அதிரடி பிளான்!!
சென்னை நகரில் உள்ள சில டாஸ்மாக் கடைகளில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரடியாகச் சென்று கள ஆய்வு நடத்தினார். அதைத் தொடர்ந்து, அரசு விதித்த தூரக் கட்டுப்பாடுகளை மீறி, பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டருக்கும் குறைவான தூரத்திலேயே பல மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்று பொதுமக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் பெரும் இடையூறு விளைவிக்கும் வகையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்காகப் பொதுமக்கள் அனைவரும் நேரடியாகவோ அல்லது ‘வீ தி லீடர்ஸ்’ என்ற அமைப்பின் மூலமாகவோ தத்தமது மாவட்ட ஆட்சியாளர்களைச் சந்தித்து தகுந்த ஆதாரங்களுடன் மனு கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார். நம் எதிர்காலத் தலைமுறையைச் சீரழிக்கும் இந்த மது அரக்கனை முழுமையாக ஒழிக்க அனைவரும் சாதி, மத, கட்சிப் பாகுபாடின்றி ஒன்றிணைந்து செயல்பட்டுத் தமிழ்நாட்டைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.
