“அழுதுகொண்டே நடித்தாரா தனுஷ்?!.. அவனுக்கு விருப்பமே இல்லை… இத்தனை நாளா இது தெரியாம போச்சே.. அப்பா சொன்ன பகீர் உண்மை!” – cinefeeds
Connect with us

CINEMA

“அழுதுகொண்டே நடித்தாரா தனுஷ்?!.. அவனுக்கு விருப்பமே இல்லை… இத்தனை நாளா இது தெரியாம போச்சே.. அப்பா சொன்ன பகீர் உண்மை!”

Published

on

தமிழ் திரையுலகில் தனது அபாரமான நடிப்புத் திறமையால் முன்னணி நடிகராகவும், கோடிக்கணக்கான ரசிகர்களின் பேரன்பைப் பெற்றவராகவும் திகழ்பவர் நடிகர் தனுஷ். தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம்’ திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த டீஸரைப் பார்த்த நெட்டிசன்கள், இது அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படத்தைப் போலவே செம்மரக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கதையா என்ற தங்களது கருத்துக்களையும் விமர்சனங்களையும் வலைத்தளங்களில் முன்வைத்து வருகின்றனர்.

தற்போதைய முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் தனுஷ் குறித்து, அவரது தந்தை கஸ்தூரி ராஜா சமீபத்தில் பலரும் அறியாத ஒரு ஆச்சரியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். மூத்த மகனான செல்வராகவன் சினிமா மீதான தீராத காதலால் திரையுலகிற்கு வந்த நிலையில், தனுஷுக்கு ஆரம்பத்தில் நடிப்பின் மீது துளியும் ஈடுபாடு இருந்ததில்லையாம். தனது முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’ படப்பிடிப்பின் போது தனுஷ் தொடர்ந்து அழுது கொண்டே தான் நடித்தார் என்றும், திரையுலகிற்கு வந்து சுமார் ஐந்து அல்லது ஆறு படங்கள் நடிக்கும் வரை “என்னை விட்டுவிடுங்கள், நான் சினிமாவிலிருந்து போய்விடுகிறேன்” என்று அவர் தொடர்ந்து கெஞ்சியதாகவும் கஸ்தூரி ராஜா நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in