LATEST NEWS
குஷியோ குஷி..! ஆடி சீராக வரும் இன்ப அதிர்ச்சி… மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 ஆக உயர்வு..!!
மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்த மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பிறந்த வீட்டு ‘ஆடி சீராக’ இந்தத் தொகையை உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை இந்த மாதத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை முதலமைச்சர் விஜய் அவர்கள் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற பெரும் எதிர்பார்ப்பு தற்போதைய அரசியல் மற்றும் பொது வட்டாரத்தில் எழுந்துள்ளது.
ஜூலை 16-ஆம் தேதி ஆடி மாதம் பிறப்பதால், அன்றைய தினமே இந்த அறிவிப்பு வெளியாகுமா அல்லது ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரவிருக்கும் ‘ஆடிப் பெருக்கு’ திருநாளில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது.
