விஜய் vs செந்தில் பாலாஜி: “ஓடியது யார்..?” தமிழக அரசியலில் பற்றி எரியும் புதிய மோதல்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் vs செந்தில் பாலாஜி: “ஓடியது யார்..?” தமிழக அரசியலில் பற்றி எரியும் புதிய மோதல்..!!!

Published

on

தமிழக அரசியலில் திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் தற்போது தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான விமர்சனங்கள் மற்றும் அதற்கு அவர் அளித்து வரும் பதிலடிகள் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையேயான அரசியல் யுத்தம் தற்பொழுது மேலும் பெரிதாகி வருகிறது.

கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் நேற்று பேசிய தவெக தலைவர் விஜய், “ஓடு ஓடு” எனப் பாட்டுப் பாடி செந்தில் பாலாஜியை மறைமுகமாக விமர்சித்துப் பேசினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, கரூர் துயரச் சம்பவம் நடந்தவுடன் அன்று இரவே அங்கிருந்து ஓடியது யார் என்று முதலமைச்சர் விஜய்க்கு செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இந்தச் சூழலில், கரூர் சம்பவத்தன்று இரவே செந்தில் பாலாஜி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் எப்படி அவ்வளவு விரைவாகவும் உடனுக்குடனும் சம்பவ இடத்திற்கு வந்தனர் என்ற புதிய கேள்வியைத் தவெகவினர் தற்போது எழுப்பி வருகின்றனர். இரு தரப்பிலிருந்தும் மாறி மாறி எழுப்பப்படும் இத்தகைய கடுமையான கேள்விகளால் இந்த மோதல் தற்பொழுது மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in