LATEST NEWS
“லூஸா.. கிறுக்கா?.. உன்னை என்ன சொல்றதுன்னே தெரியல”.. சிஎம் விஜய்யை மேடையிலேயே ஒருமையில் கிழித்து தொங்கவிட்ட ஆ.ராசா.. அதிரும் தமிழக அரசியல் களம்..!!
கட்சி நிதி விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஒருமையில் பேசி கடுமையாக விமர்சித்துள்ளார். தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “உன்னை லூசு என்பதா, கிறுக்கு என்பதா என்று தெரியவில்லை” என்று முதலமைச்சர் விஜய்யை நோக்கி மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திச் சாடியுள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கிய ஆ.ராசா, தவறுதலாகப் பணம் பெற்றது எந்தக் கட்சி என்பதை முதலமைச்சர் தெளிவாகக் குறிப்பிடாத காரணத்தினாலேயே திமுக இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார். மேலும், “முதுகெலும்பில்லாத ஒரு முதலமைச்சரையும், அரைவேக்காட்டுத்தனமான அமைச்சர்களையும் வைத்துக் கொண்டு பேரவைக்குள் எப்படி இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பிய அவர், அதனால்தான் திமுக உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேறினர் என்றும் தனது பேச்சில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
