LATEST NEWS
“யார்ரா இந்த 10 மாத சுட்டி?”.. வெறும் 36 செகண்டில் நடந்த உலக சாதனை… வாயடைத்துப்போன நெட்டிசன்கள்..!!
பொதுவாக 10 மாதக் குழந்தைகள் தங்களது பிஞ்சுப் பாதங்களை எடுத்து வைத்து, அப்போதுதான் தவழவோ அல்லது தட்டுத்தடுமாறி முதல் அடி எடுத்து வைக்கவோ தொடங்குவார்கள். ஆனால், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரியான்ஸ் பட்டனஷெட்டி என்ற 10 மாதக் குழந்தை, யாரும் எதிர்பாராத வகையில் ஒரு அசாத்திய சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார். அந்தச் சிறிய வயதிலேயே, வெறும் 36 வினாடிகளில் கடகடவென 21 படிக்கட்டுகளை ஏறி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.
இந்த அசாத்தியமான மற்றும் அதிவேகமான சாதனைக்காக ‘நோபல் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’ என்ற மதிப்புமிக்க உலக சாதனைப் புத்தகத்தில் ரியான்ஸின் பெயர் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளது. பார்ப்போரைக் வியக்க வைக்கும் இந்தச் சாதனையைச் செய்த 10 மாதச் சுட்டி ரியான்ஸுக்கு, தற்பொழுது சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், உலகெங்கிலும் இருந்தும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
