டிகிரி முடித்திருந்தாள் போதும்.. 779 காலிப்பணியிடங்கள்.. மாதச் சம்பளம் ₹1,20,940 வரை.. வங்கித் துறையில் அரசு வேலை.. உடனே அப்பளை பண்ணுனுங்க..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டிகிரி முடித்திருந்தாள் போதும்.. 779 காலிப்பணியிடங்கள்.. மாதச் சம்பளம் ₹1,20,940 வரை.. வங்கித் துறையில் அரசு வேலை.. உடனே அப்பளை பண்ணுனுங்க..!!

Published

on

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியாவில் 779 கிரெடிட் ஆபீசர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சிஏ அல்லது சிஎம்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும். தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்குத் தொடக்கச் சம்பளமாக ரூ.64,820 முதல் அதிகபட்சமாக ரூ.1,20,940 வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கித் துறையில் உயர் பதவியில் அமரக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

இந்த வேலைவாய்ப்பிற்கான தகுதியான விண்ணப்பதாரர்கள், இணையவழித் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்களின் தரவரிசைப் பட்டியலின்படி தேர்வு செய்யப்படுவர். இப்பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் ரூ.850 ஆகக் குறிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் வாய்ந்த நபர்கள், வரும் ஜூலை 20-ஆம் தேதிக்குள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bankofindia.co.in க்குச் சென்று ஆன்லைன் வாயிலாகத் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இறுதி நாளில் ஏற்படும் இணையப் பக்க நெரிசல் மற்றும் பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு, காலக்கெடுவுக்கு முன்பாகவே விண்ணப்பப் பணிகளை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in