பெற்றோர்களே உஷார்..! வீட்டில் தனியாக இருந்த சிறுமியைக் குறிவைத்த பானிபூரி வியாபாரி… சிகிச்சையின் பொது வெளிவந்த பகீர் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

பெற்றோர்களே உஷார்..! வீட்டில் தனியாக இருந்த சிறுமியைக் குறிவைத்த பானிபூரி வியாபாரி… சிகிச்சையின் பொது வெளிவந்த பகீர் உண்மை..!!

Published

on

பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்த 48 வயது நபர் ஒருவர், அசாம் மாநிலத்தின் சிவசாகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அங்கு பானிபூரி கடை நடத்தி வந்துள்ளார். இந்த நபரின் வீட்டின் அருகே தினக்கூலி வேலை செய்யும் தம்பதியினர் தங்களது 12 வயது மகளுடன் வசித்து வந்துள்ளனர்.

சிறுமியின் பெற்றோர் இருவரும் தினசரி வேலைக்காக வீட்டை விட்டு வெளியே செல்லும் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்த பானிபூரி வியாபாரி, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தனியாக இருந்த அந்த 12 வயது சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த சிறுமிக்கு அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

Advertisement

தொடர்ச்சியான இந்த பாலியல் அத்துமீறலால் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த சிறுமி, பானிபூரி வியாபாரி தனக்குச் செய்த கொடுமைகள் குறித்துத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவலர்களிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அசாமில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in