“48 மணி நேரம் தான் டைம்.. ரூ.50 கோடி ரெடி பண்ணுங்க!”.. தனியார் பள்ளி நிர்வாகிக்கு அன்பில் மகேஸ் அனுப்பிய மரண நோட்டீஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“48 மணி நேரம் தான் டைம்.. ரூ.50 கோடி ரெடி பண்ணுங்க!”.. தனியார் பள்ளி நிர்வாகிக்கு அன்பில் மகேஸ் அனுப்பிய மரண நோட்டீஸ்..!!

Published

on

தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் நந்தகுமார், பொதுமேடை ஒன்றில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருந்தார். தனியார் பள்ளிகளுக்கான அனுமதியை வழங்குவதில் முன்னாள் அமைச்சர் லஞ்சம் வாங்கியதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த அவதூறு பரப்பும் குற்றச்சாட்டை அடுத்து, நந்தகுமாருக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தரப்பிலிருந்து தற்போது சட்டப்பூர்வ வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு தன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு பரப்பப்பட்ட அபாண்டமான பொய் என்று அன்பில் மகேஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அனுப்பப்பட்டுள்ள அந்த வக்கீல் நோட்டீஸில், முன்னாள் அமைச்சர் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசியதற்கு அடுத்த 48 மணி நேரத்திற்குள் நந்தகுமார் பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு மன்னிப்பு கேட்கத் தவறினால், நற்பெயருக்கு விளைவித்த பாதிப்பிற்கு இழப்பீடாக ₹50 கோடி வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் நீதிமன்றம் மூலம் கடுமையான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in