LATEST NEWS
கோடி கோடியாய் பணம் இருந்தும் இப்படியா?…. ஐஸ்வர்யா ராய்க்கு அனுப்பப்பட்ட திடீர் நோட்டீஸ்…. ரசிகர்கள் ஷாக்….!!!!
உலக அழகியாக கடந்த 1994 ஆம் ஆண்டு தேர்வாகி பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றும் பல கோடி சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வந்தார். இதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு ஆரத்யா பச்சன் என்ற மகளைப் பெற்றெடுத்த ஐஸ்வர்யா சினிமாவில் இருந்து சற்று விலகினார். சில நாட்கள் கழித்து சினிமாவில் மீண்டும் களம் இறங்கினார். இந்நிலையில் தற்போது மராட்டிய மாநில நில வருவாய்த்துறை ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது. நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னாரில் ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு ஹேக்டர் நிலம் உள்ளது.
அதற்கு கடந்த ஒரு வருடமாக நிலவரி 21960 ரூபாய் செலுத்தவில்லை எனவும் பல தடவை கூறியும் வரியை செலுத்தாததால் ஐஸ்வர்யா ராய்க்கு தற்போது தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பத்து நாட்களுக்குள் வரியை செலுத்தாவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோடி கோடியாய் பணம் சம்பாதிக்கும் பிரபல நடிகையான இவர் நில வரி செலுத்தாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
