“இதை செஞ்சா அரசியலை விட்டே ஓடிடுறேன்!”.. சிஎம் விஜய்க்கு ஆர்.பி உதயகுமார் போட்ட மாஸ் ஓப்பன் சேலஞ்ச்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இதை செஞ்சா அரசியலை விட்டே ஓடிடுறேன்!”.. சிஎம் விஜய்க்கு ஆர்.பி உதயகுமார் போட்ட மாஸ் ஓப்பன் சேலஞ்ச்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!

Published

on

மதுரையில் நடைபெற்ற அதிமுக தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக முதல்வர் விஜய்க்குத் திறந்தவெளி சவால் ஒன்றை விடுத்துள்ளார். சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு வக்காலத்து வாங்கிப் பேசியிருந்தும், தற்போது அதிமுகவைத் தூர்ந்துபோன சக்தி என விஜய் விமர்சிப்பது அநாகரிகமானது என்று அவர் சாடினார். மேலும், திமுகவும் அதிமுகவும் கூட்டு என்று கூறும் விஜய், தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ-க்களைக் குதிரைப் பேரம் நடத்தித் தன் பக்கம் வளைக்கப் பார்ப்பதாகக் குற்றம் சாட்டிய உதயகுமார், கரூர் தேர்தல் விவகாரங்களைச் சுட்டிக்காட்டி விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து விஜய்க்கு நேரடி சவால் விடுத்த ஆர்.பி. உதயகுமார், தற்போதைய தமிழக சட்டமன்றத்தில் விசில் சின்னத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு அமர்ந்துள்ள 107 சட்டமன்ற உறுப்பினர்களின் முகத்தைப் பார்த்து, அவர்களின் பெயரை விஜய் சரியாகக் கூறிவிட்டால், தான் பொது வாழ்க்கையிலிருந்தே விலகிவிடத் தயார் என அதிரடியாக அறிவித்தார். கொளத்தூர் பேச்சு முதல் குதிரைப் பேரம் குற்றச்சாட்டு வரை முதல்வர் விஜயை நோக்கி ஆர்.பி. உதயகுமார் முன்வைத்துள்ள இந்த அடுக்கடுக்கான விமர்சனங்களும் சவாலும் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in