LATEST NEWS
பெட்ஷீட்டை 3 நாளுக்கு ஒருமுறை துவைக்கலனா இத்தனை ஆபத்தா..?! இதனால தான் முகப்பரு வருதா..? உங்க பெட்ஷீட்டில் ஒளிந்திருக்கும் பகீர் ரகசியம்..!!!
ஒரு மனிதன் தனது வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை படுக்கையிலேயே கழிக்கிறான். நாம் தூங்கி எழுந்தவுடன் படுக்கையை நேர்த்தியாக ஒழுங்குபடுத்தி வைத்தாலும், அதனை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்கிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். படுக்கை விரிப்பு மற்றும் தலையணை உறைகளை நீண்ட நாட்கள் துவைக்காமல் பயன்படுத்தினால், நம் உடலிலிருந்து வெளிப்படும் எண்ணெய், வியர்வை, இறந்த சரும செல்கள் மற்றும் தூசிப் பூச்சிகள், பாக்டீரியா, பூஞ்சை போன்றவை அந்தத் துணிகளில் படிந்து கொண்டே செல்லும்.
இவ்வாறு துவைக்காத படுக்கை விரிப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் பல்வேறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, தோல் அரிப்பு, ஒவ்வாமை, முகப்பருக்கள், துர்நாற்றம் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புள்ளது. மேலும், சுத்தமில்லாத படுக்கையானது மனிதனின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுத்து, அன்றாட உடல் ஆரோக்கியத்தையும் பெருமளவில் பாதிக்கிறது.
பொதுவாக படுக்கை விரிப்புகளை வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் துவைக்க வேண்டும். தலையணை உறைகளை மூன்று நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது அதிகபட்சமாக வாரத்திற்கு ஒருமுறையோ மாற்றித் துவைப்பது நல்லது. ஆனால், அதிகமாக வியர்ப்பவர்கள், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 3 நாட்களுக்கு ஒருமுறை இவற்றைத் துவைப்பது மிக அவசியமாகும். மேலும், இவற்றை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்துத் துவைப்பதன் மூலம் அவற்றில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை முழுமையாக அழிக்க முடியும்.
