BREAKING: தவெகவில் CPM கட்சி இடம்பெறாது.. பெ. சண்முகம் திட்டவட்ட அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: தவெகவில் CPM கட்சி இடம்பெறாது.. பெ. சண்முகம் திட்டவட்ட அறிவிப்பு..!!

Published

on

தவெக அமைச்சரவையில் சிபிஎம் கட்சி கட்டாயம் இடம்பெறாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் பெ. சண்முகம் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மண்ணில் இருந்து ஒருவர் அமைச்சராக வருவார் என்று சிபிஐ வீரபாண்டியன் நேற்று கூறியுள்ளது குறித்துப் பேசிய அவர், எதன் அடிப்படையில் வீரபாண்டியன் அப்படி கூறினார் என்று இன்று அவரிடம் நேரில் கேட்க இருக்கிறேன் என்றும் விளக்கமளித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலில் தவெக ஆட்சிக்கு அமைச்சரவையில் பங்கேற்காமல் வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளிப்பதாக சிபிஎம் கட்சி தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் தவெக தலைமையிலான கூட்டணியில் அமைச்சரவை பங்கீடு குறித்த விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் மேலும் சூடுபிடித்துள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in