LATEST NEWS
24 மணி நேரத்தில் 3 முறை தாக்குதல்!.. ஈரானை அதிரவைத்த அமெரிக்காவின் திடீர் ஆக்ஷன்.. நடுங்கும் மத்திய கிழக்கு நாடுகள்..!!
அமெரிக்க ராணுவம் கடந்த 24 மணி நேரத்தில் மூன்றாவது முறையாக ஈரான் மீது புதிய கட்ட தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இரவு முழுவதும் டஜன் கணக்கான இலக்குகளைத் தாக்கியதைத் தொடர்ந்து, பகல் நேரத்திலும் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக ராணுவத்தின் மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது. தாக்குதல்களின் வேகம் அதிகரித்து வருவதை உணர்த்தும் இந்த அசாதாரணமான நடவடிக்கை, பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை பிற்பகுதியில் தொடங்கிய இந்த ஏவுகணை தாக்குதலானது, ஈரானின் துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்ட முற்றுகையை மீற முயன்ற எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பலை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளது. அந்த எண்ணெய் கப்பலை செயலிழக்க செய்ய ஏவுகணைகளை ஏவியதாக அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
