LATEST NEWS
ரீல்ஸ் விடுறது, வாய் சவடால் அடிப்பது போன்ற தகிடுதத்தம் வேலையை விட்டுட்டு வேலையை பாருங்க சார்… முதல்வர் விஜய்யை விமர்சித்த எடப்பாடி..!!
தமிழகத்தில் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தை தவெக அரசு மத்திய அரசின் துணையுடன் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முந்தைய திமுக அரசு ₹11,250 கோடி மதிப்பிலான இந்த மிக முக்கியமான திட்டத்தைக் கிடப்பில் போட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தற்போதைய தவெக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பொதுமக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய இத்திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தவெக அரசைச் சாடிப் பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி, வெறும் வாய் சவடால் அடிப்பது, சமூக வலைதளங்களில் ரீல்ஸ் விடுவது மற்றும் குதிரை பேரம் நடத்தி ஆட்சியைத் தக்கவைக்க முயல்வது போன்ற ‘தகிடுதத்தம்’ வேலைகளை தவெக தலைமை கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அரசியல் ரீதியான விளம்பரங்களை விடுத்து, தமிழக மக்களின் மிக முக்கியப் பிரச்சினையான காவிரி நீர் மேலாண்மை திட்டத்தில் தவெக அரசு உடனே கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
