CINEMA
“எங்க அப்பாவும், அம்மாவும்” அப்போ தான் எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்டேன்.. முதன்முறையாக மனம் திறந்த விஜய் மகன் ஜேசன் சஞ்சய்..!!
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ள நிலையில், தனது முதல் திரைப்படமான ‘சிக்மா’ குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். சினிமாவில் இயக்குநராகக் களமிறங்கும் தனது முடிவுக்குக் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அளித்த ஆதரவு குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். தனக்குக் கிடைத்த இந்த முதல் வாய்ப்பை ஒரு மிகப்பெரிய பொறுப்பாகக் கருதிப் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய ஜேசன் சஞ்சய், “சினிமாவில் இயக்குநராக அறிமுகமாவது பற்றி எனது அப்பா விஜய், அம்மா சங்கீதா, தங்கை மற்றும் நண்பர்களிடம் பேசினேன். அவர்கள் அனைவரும் எனக்குத் தங்களின் முழு ஆதரவையும் உடனடியாகத் தெரிவித்தனர். அப்போதுதான் என் குடும்பத்தினர் என் மீது எவ்வளவு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை என்னால் முழுமையாக உணர முடிந்தது” என்று நெகிழ்ந்துள்ளார்.
தனது தந்தை விஜய் தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தபோதிலும், அவருடைய நிழலில் வளராமல் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த இயக்குநர் பாதையைத் தான் தேர்ந்தெடுத்ததாக சஞ்சய் தெளிவுபடுத்தியுள்ளார். ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த ‘சிக்மா’ திரைப்படத்தின் கதைக்களம், படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அறிய ரசிகர்கள் தற்போது மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
