BREAKING: வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்படுவதற்கும், குடியுரிமைக்கும் தொடர்பில்லை – உச்ச நீதிமன்றம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்படுவதற்கும், குடியுரிமைக்கும் தொடர்பில்லை – உச்ச நீதிமன்றம்..!!

Published

on

வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரது பெயர் நீக்கப்பட்டால், அவர் இந்திய குடியுரிமையை இழந்ததாக அர்த்தமாகாது என இந்திய உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு வாக்காளர் பட்டியலை நிர்வகிக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளதே தவிர, ஒருவரது குடியுரிமையை முடிவு செய்யும் அதிகாரம் அதற்கு இல்லை என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது பெயர்கள் நீக்கப்பட்டதால் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மறுக்கப்படுவதாகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சந்தேகத்திற்குரிய வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து நீக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருந்தாலும், அது ஒருவரது குடியுரிமைக்கான இறுதி முடிவு அல்ல என்றும், குடியுரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள தகுதியான அமைப்புகள் மட்டுமே அதைத் தீர்மானிக்க முடியும் என்றும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in