குடிமகன்களுக்கு அதிரடி ஷாக்..! டாஸ்மாக் பார்களில் இனி இதற்கெல்லாம் தடை… டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குடிமகன்களுக்கு அதிரடி ஷாக்..! டாஸ்மாக் பார்களில் இனி இதற்கெல்லாம் தடை… டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய உத்தரவு..!!

Published

on

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் பார்களில் பீடி, சிகரெட் மற்றும் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், பார்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் அனைத்தும் கட்டாயம் உரிய தரச்சான்று (Quality Certification) பெற்றதாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனுடன், மதுக்கடைகள் இயங்குவதற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அதனுடன் இணைக்கப்பட்ட பார்களும் செயல்பட வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறிச் செயல்படும் பார்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in