LATEST NEWS
FLASH:திமுகவில் வெடித்த சர்ச்சை..! ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் விலகல்..!!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், திமுக அயலக அணி இணைச் செயலாளருமான வழக்கறிஞர் புகழ் காந்தி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சித் தலைமைக்கு அவர் எழுதியுள்ள விலகல் கடிதத்தில், திமுக தற்போது ஊழல் கூடாரமாக மாறிவிட்டதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், கட்சியில் திறமையான இளைஞர்களுக்கு உரிய மதிப்பும் அங்கீகாரமும் அளிக்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். முதலமைச்சருக்கு நெருக்கமான ஒருவரே இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விலகியுள்ளது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
