LATEST NEWS
ஆஹா..! தங்கம் விலை அதிரடியாக குறைவு.. எவ்வளவு தெரியுமா..? இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..!!
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.2,160 குறைந்து பெரும் சரிவைக் கண்டுள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,000க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று இந்த வீழ்ச்சியின் காரணமாக ஒரு சவரன் ரூ.1,05,840-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையும் ரூ.270 குறைந்து, தற்போது ரூ.13,230க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று கணிசமாகக் குறைந்து நுகர்வோருக்கு நிம்மதி அளித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.240க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.5,000 சரிந்து ரூ.2,40,000க்கும் விற்கப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் லாப நோக்கம் காரணமாகவே இந்தத் திடீர் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்
