LATEST NEWS
வண்ணமயமான ரெயின்கோட்… செம மாஸ் வாக்கிங்..! இணையத்தை ரவுண்டு கட்டும் குட்டிச் செல்லங்கள்…! நேபாள சுட்டிகளின் வைரல் வீடியோ..!!
நேபாளத்தின் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பகுதியில் மழைக்காலத்தில் பள்ளிக்குச் செல்லும் மூன்று சிறு குழந்தைகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரின் இதயங்களையும் வென்று வருகிறது. அணில் புட் என்பவரால் படம்பிடிக்கப்பட்டு இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், நனைந்த மலைப் பாதையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் குழந்தைகள் தங்களின் சொந்த உலகத்தில் மகிழ்ச்சியாக நடந்து செல்வது காண்போரின் முகத்தில் புன்னகையை வரவழைக்கிறது.
குழந்தைகள் மூவரும் இளஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் பிரகாசமான ரெயின்கோட் அணிந்து, சிறிய குடைகளைப் பிடித்தபடி ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக்கொண்டு மெதுவாக நடந்து செல்கின்றனர். வீடியோ எடுத்தவர் அவர்களை அழைத்தபோதிலும், அடையாளம் தெரியாத அந்நிய நபரை அவர்கள் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. அச்சமின்றி, கவனச்சிதறல் இன்றி அவர்கள் தொடர்ந்து நடந்து சென்ற அவர்களின் இந்தச் முதிர்ச்சியான நடவடிக்கை, “அந்நியர்களிடம் இடைவெளி விட்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்ற நற்பண்பை உணர்த்துவதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DbD8zmvN5n9/?utm_source=ig_web_button_share_sheet
மூன்று குழந்தைகளும் அழகாக இருந்தாலும், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது கடைசியாக நடந்த மிகச் சிறிய குழந்தைதான். அக்குழந்தை தனது ரெயின்கோட் பாக்கெட்டில் கைகளை விட்டுக்கொண்டு மிகவும் கூலாகவும், ஸ்டைலாகவும் நடந்து சென்ற விதம் இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குழந்தைகளின் இந்த அப்பாவித்தனமும் கெத்தான நடையும் சோஷியல் மீடியாவில் தற்போது அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.
