LATEST NEWS
“இதனால்தான் நாங்க திரும்ப வரலை..! அமெரிக்காவிலிருந்து இந்தியா வர்றது அவ்வளவு லேசு இல்ல… NRI பகிர்ந்த பகீர் உண்மைகள்..!!”
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் ஒருவர், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஏன் மீண்டும் சொந்தத் தாயகமான இந்தியாவுக்குத் திரும்புவது கடினமாக உணர்கிறார்கள் என்பதற்கான காரணங்களைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தச் செய்தி இணையத்தில் பலரின் கவனத்தைப் பெற்று, பெரியளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்நாட்டின் மீது அன்பும், சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும் என்ற ஆசையும் பலருக்கு இருந்தாலும், நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும் சவால்களும் அவர்களைத் தடுத்து நிறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ள முக்கியக் காரணங்களில் ஒன்று, அமெரிக்காவில் கிடைக்கும் சொகுசான வாழ்க்கை முறை, சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் வேலைக்கேற்ற உயர்தரச் சம்பளம் ஆகியவற்றிக்கு மக்கள் பழகிவிடுவது ஆகும். மேலும், அமெரிக்காவில் பிறந்து வளரும் குழந்தைகளின் கல்வி மற்றும் சமூகச் சூழல் இதில் பெரும் பங்கு வகிக்கிறது. அமெரிக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை திடீரென இந்தியாவின் கல்வி முறைக்கும், அதிக போட்டி நிறைந்த சூழலுக்கும் மாற்றுவது பெற்றோருக்குச் சவாலாக அமைகிறது. இதனால், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தாய்நாட்டிற்குத் திரும்புவதை அவர்கள் தொடர்ந்து தள்ளிப்போடுகிறார்கள்.
மேலும், இந்தியாவில் மீண்டும் வேலை தேடும் போது கிடைக்கும் சம்பள வித்தியாசம், பணி கலாச்சார மாற்றம், போக்குவரத்து நெரிசல் மற்றும் அங்கிருக்கும் வாழ்க்கை முறைக்கு மீண்டும் தகவமைத்துக் கொள்வதில் உள்ள சிரமங்கள் ஆகியவை மக்களைத் தயங்க வைக்கின்றன. காலப்போக்கில் அமெரிக்க வாழ்க்கை முறைக்கு முழுமையாகப் பழகிவிடுவதால், தாய்நாட்டிற்குத் திரும்புவது என்பது பலருக்கும் நிறைவேறாத கனவாகவே மாறிவிடுகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பதிவு பல வெளிநாடுவாழ் இந்தியர்களின் உண்மையான மனநிலையை எதிரொலிப்பதாகப் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DbKGjYvM02B/?utm_source=ig_web_button_share_sheet
