LATEST NEWS
“வேலுநாச்சியாரின் வழியில் அன்பு அக்கா த்ரிஷா” தமிழக அரசு கொடுத்த அங்கீகாரம்.. மதுரையில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்..!!
மதுரை மாவட்டத்தில் நடிகை த்ரிஷா நற்பணி மன்றம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்பொழுது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. மதுரையின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர், த்ரிஷாவின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் போஸ்டரில், “எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை. என்றும் மதுரை மீனாட்சி தாய் ஆசீர்வாதத்தால், தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக எங்கள் அன்பு அக்கா திரிஷாவிற்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம். ‘வேலுநாச்சியாரின் வழியில் அன்பு அக்கா த்ரிஷா’” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முதல் ரசிகர் மன்றம் தங்களது சங்கம் தான் என்பதை ரசிகர்கள் இதில் பெருமையுடன் வெளிப்படுத்தியுள்ளனர்.
மதுரையின் அரசியல் முக்கியத்துவத்தையும், த்ரிஷா நற்பணி மன்றத்திற்கு கிடைத்துள்ள அரசு அங்கீகாரத்தையும் இணைத்து ரசிகர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் தற்பொழுது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் ஒரு புதிய பேசுபொருளாக மாறியுள்ளது.
