LATEST NEWS
என்னடா நீ பெரிய ஆளா.? பிஸ்டலால் திருப்பி அடித்து பயங்கரவாதியையே மிரளவைத்த தனிநபர்… அமெரிக்காவில் நடந்த திடுக்கிடும் சம்பவம் … பகீர் சிசிடிவி வீடியோ வைரல்..!!
அமெரிக்காவின் இடாஹோ மாநிலத்தில் உள்ள ‘ட்வின் ஃபால்ஸ்’ நகரில் புதிதாகத் திறக்கப்பட்ட துரித உணவகத்தின் அருகே, துப்பாக்கியுடன் புகுந்த சாட் வில்லியம்ஸ் (24) என்ற நபர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தத் தொடங்கினார். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் அங்குப் பெருமளவில் பீதி ஏற்பட்டு, மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.
அந்த ஆபத்தான தருணத்தில், ஜோர்டான் சாலினாஸ் என்ற துணிச்சலான நபர், தாக்குதல்தாரி தன்னிடம் வைத்திருந்த சக்திவாய்ந்த ரைஃபிள் (Rifle) ரகத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்தார். சிறிதும் தயங்காமல், தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை மட்டும் வைத்துக்கொண்டு, எதிரில் நின்ற அந்தப் பயங்கரவாதியை நோக்கித் திருப்பியடித்துப் பதில் தாக்குதலில் ஈடுபட்டார்.
இவருடன் சேர்ந்து பணியில் இல்லாத காவல்துறை அதிகாரி ஒருவரும் எதிர்த்துப் போராடியதால், தாக்குதல்தாரியால் மேலும் பெரிய அளவில் பேரழிவை ஏற்படுத்த முடியாமல் அங்கிருந்து விரட்டப்பட்டான். இவர்களின் இந்தத் துணிச்சலான செயலால் பலரின் உயிர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகிச் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
