LATEST NEWS
பரபரப்பு..! உதயநிதியின் சர்ச்சை பேச்சு.. இன்று தமிழகம் முழுவதும் வெடிக்கிறது போராட்டம்… தவெகவினர் அதிரடி முடிவு…!!
தமிழ்நாட்டில் தவெக கட்சியினர் இன்று உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய பேச்சைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர் . தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்தில் பேசியதாகக் கூறப்படும் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இந்த பேச்சுக்கு அரசியல் வட்டாரத்தில் ஆதவ் அர்ஜுனா, மாணிக்கம் தாகூர் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஏற்கனவே தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த சூழலில், தவெக கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பில், இன்று காலை 10 மணிக்கு மேல் தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் இந்த ஆர்ப்பாட்டம் தீவிரமாக நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். உதயநிதியின் பேச்சுக்கு எதிராக தவெகவினர் மேற்கொள்ளும் இந்த அதிரடிப் போராட்டம் தமிழக அரசியல் களத்தில் தற்போது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது
