LATEST NEWS
BREAKING: இன்று முதல் 3 நாட்களுக்கு… ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆகஸ்ட் 4, 5, 6 ஆகிய 3 நாள்களுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருள்களை 100% தடையின்றி விநியோகிக்க கூட்டுறவுத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ், நியாயவிலைக் கடைகளுக்கு நேரடியாக வர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் பயனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று இப்பொருள்களை வழங்குவதை ரேஷன் கடை ஊழியர்கள் முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு விநியோகம் குறித்த தேதிகள் மற்றும் முக்கிய விவரங்களை பொதுமக்கள் எளிதில் அறியும் வண்ணம், அனைத்து ரேஷன் கடைகளிலும் முன்னதாகவே விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் அந்த அரசு அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையின் இந்த தீவிர நடவடிக்கை, விளிம்புநிலை மக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி அத்தியாவசியப் பொருள்கள் நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
