LATEST NEWS
அடப்பாவமே..! துக்கம் விசாரிக்கப் போன இடத்துல இப்படி ஒரு சோகமா..? சவப்பெட்டிய தொட்டதும்… மின்சாரம் தாக்கி மூதாட்டி பலியான பகீர் சம்பவம்..!!
புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே காக்கையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது.
இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த ராஜாத்தி மற்றும் மற்றொருவர் துக்கம் விசாரிக்கச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சவப்பெட்டியில் கை வைத்து அஞ்சலி செலுத்தியபோது, திடீரென இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். இதைக் கண்டு உடனடியாக உஷாரான அங்கிருந்தவர்கள், மற்றவர்கள் சவப்பெட்டியைத் தொடாதவாறு தடுத்து, சவப்பெட்டிக்கான மின் இணைப்பைத் துண்டித்தனர்.
தொடர்ந்து, மின்சாரம் தாக்கி காயமடைந்த இருவரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், ராஜாத்தி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். காயமடைந்த மற்றொருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாகவே இந்த மின்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
