LATEST NEWS
என்னப்பா இது அநியாயம்… பக்தர் கொடுத்த பஞ்சலோக டாலர் அபேஸ்… காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் பூசாரி செய்த அதிர்ச்சி வேலை..!ஆடி அமாவாசை திருவிழாவில் அம்பலமான உண்மை..!!
திண்டுக்கல் ஸ்ரீ பூர்ணா சிற்பக்கலை கூடத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள காரையாறு ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் திருவுருவம் பொறித்த பஞ்சலோகத்திலான டாலர் மாலையை கோயிலில் பணிபுரியும் பூசாரி ஒருவரிடம் காணிக்கையாக வழங்கியுள்ளார்.
ஆனால், இது தொடர்பாக அந்த பக்தர் கோயில் நிர்வாகத்திற்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்கவில்லை. இதனைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பூசாரி, அந்த பஞ்சலோக டாலரை கோயில் கணக்கில் சேர்க்காமல் முறைகேடாகத் திருடித் தானே அணிந்து கொண்டுள்ளார்.
கடந்த 12-ம் தேதி ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர் தாமோதரன் கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது, தான் காணிக்கையாகக் கொடுத்த பஞ்சலோக டாலரை பூசாரி அணிந்திருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் உரிய பதில் அளிக்காததால் அந்த பக்தர் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார்.
