திடீரென ரூட்டை மாற்றிய சிபிஐ..! தவெக கூட்டணி உடைகிறதா..? இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு…? சிபிஐ வீரபாண்டியன் கொடுத்த மரண ட்விஸ்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீரென ரூட்டை மாற்றிய சிபிஐ..! தவெக கூட்டணி உடைகிறதா..? இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு…? சிபிஐ வீரபாண்டியன் கொடுத்த மரண ட்விஸ்ட்..!!

Published

on

இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து கட்சி மேலிடமே இறுதி முடிவு எடுக்கும் என சிபிஐ மூத்த தலைவர் வீரபாண்டியன் தெரிவித்துள்ள கருத்து, தவெக கூட்டணியில் நிலவும் விரிசலை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. சமீப காலமாக பயிர்க்கடன் தள்ளுபடி, சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய சொகுசு கார்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தவெக அரசின் முடிவுகளுக்குக் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிப்படையாகத் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.

கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து வெளிப்பட்டு வரும் இத்தகைய கருத்து வேறுபாடுகள், தவெக மற்றும் சிபிஐ இடையேயான அரசியல் முரண்பாட்டை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மக்கள் நலனைப் புறக்கணித்து அரசு எடுக்கும் தன்னிச்சையான முடிவுகளால் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்தச் சூழலில், இடைத்தேர்தல் ஆதரவு குறித்து சிபிஐ கட்சி மேலிடம் தனியாக ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கும் என வீரபாண்டியன் அறிவித்துள்ளது, தவெக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறுகிறதா என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த அதிரடி நகர்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், ஆளுங்கட்சி முகாமில் பலத்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in