அய்யோ நெஞ்சே பதறிடுச்சு..! லிஃப்ட் கேப்ல விழப் போன குழந்தை… டக்குன்னு ஓடி வந்து சிறுவனை மீட்ட ரியல் ஹீரோ… அந்த செக்யூரிட்டி மட்டும் அங்க இல்லைனா என்ன ஆயிருக்கும்..? வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ நெஞ்சே பதறிடுச்சு..! லிஃப்ட் கேப்ல விழப் போன குழந்தை… டக்குன்னு ஓடி வந்து சிறுவனை மீட்ட ரியல் ஹீரோ… அந்த செக்யூரிட்டி மட்டும் அங்க இல்லைனா என்ன ஆயிருக்கும்..? வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் காட்சி..!!

Published

on

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ஒரு பாதுகாப்பு ஊழியரின் விழிப்புணர்வும், சுறுசுறுப்பும் ஒரு சிறுவனை மிகப்பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது. சில வினாடிகளே கொண்ட இந்த வீடியோவை பார்ப்பவர்களின் மூச்சை நிறுத்தும் வகையில் உள்ளது. வீடியோவில், ஒரு குழந்தை லிஃப்ட் பகுதிக்கு அருகே நடந்து செல்வது தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக, லிஃப்ட் கதவு மற்றும் அதன் காலியான பகுதிக்கு இடையே குழந்தை செல்லும் போது, கீழே விழுந்து பெரும் ஆபத்தில் சிக்கும் நிலை உருவாகிறது.

அந்தப் பதற்றமான சூழ்நிலையில் அங்கிருந்த பிறருக்கு என்ன செய்வது என்றே புரியாத நிலையில், அருகில் இருந்த செக்யூரிட்டி கார்டின் பார்வை குழந்தை மீது படுகிறது. அவர் ஒரு நொடி கூட தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் ஓடிவந்து குழந்தையைப் பிடித்து விடுகிறார். அவருடைய விரைவான செயல்பாட்டால் குழந்தை கீழே விழாமல் பாதுகாப்பாக மீட்கப்படுகிறது. இச்சம்பவம் மிக விரைவாக நடந்து முடிந்ததால், வீடியோவை பார்க்கும் இணையவாசிகளும் சில வினாடிகள் அதிர்ச்சியடைந்து போகின்றனர்.

Advertisement

பாதுகாப்பு ஊழியர் ஆபத்தை உடனடியாக உணர்ந்து, சிறிதும் பயப்படாமல் நொடிப்பொழுதில் செயல்பட்டதே குழந்தை காப்பாற்றப்பட முக்கிய காரணம். அவர் சில வினாடிகள் தாமதித்திருந்தாலும் நிலைமை கவலைக்கிடமாகி இருக்கும். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையத்தில் அனைவரும் அந்த கார்டின் திறமையையும் தைரியத்தையும் பாராட்டி வருகின்றனர். பாதுகாப்பு பணியாளர்களின் வேலை வெறுமனே வளாகத்தை கண்காணிப்பது மட்டுமன்றி, அவசர காலத்தில் சரியான முடிவெடுப்பதும் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் இச்சம்பவம் அமைந்துள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in