LATEST NEWS
#BREAKING: பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு – அரசு உரிய முடிவெடுக்க உத்தரவு..!!
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்குவது குறித்து, சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு தமிழக அரசு தகுந்த முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அரசு எந்தவொரு முடிவும் எடுக்கத் தவறும்பட்சத்தில், நீதிமன்றமே இது குறித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பெண்களின் உடல்நலம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் விவாதிக்கப்பட்டு வரும் இந்த மாதவிடாய் விடுமுறை விவகாரத்தில், நீதிமன்றத்தின் இந்த அதிரடி அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை பெரும் வரவேற்பையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
