LATEST NEWS
BREAKING: வடசென்னை, ஆவடி, பொன்னேரி மக்களுக்கு குட் நியூஸ்… மீஞ்சூரில் ரூ.4,800 கோடியில் மெகா குடிநீர் திட்டம்..! பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..!!
சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் ஒரு முக்கிய புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வடசென்னை, ஆவடி மற்றும் பொன்னேரி ஆகிய பகுதிகளின் குடிநீர் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதற்காக, மீஞ்சூரில் ரூ.4,800 கோடி செலவில் புதிய கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பொன்னேரி, ஆவடி உள்ளிட்ட வடசென்னைப் பகுதி மக்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
