விஜய் பிரதமர் ஆவாரா..? அதை நாங்க யாரும் சொல்லவே இல்ல ஆனால்… கிளம்பிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் வெங்கடரமணன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் பிரதமர் ஆவாரா..? அதை நாங்க யாரும் சொல்லவே இல்ல ஆனால்… கிளம்பிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் வெங்கடரமணன்..!!

Published

on

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நாட்டின் அடுத்த பிரதமர் ஆவார் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன் விளக்கமளித்துள்ளார். தவெகவைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கட்சியின் தலைவர் மீது கொண்டுள்ள அபரிவிதமான ஆசையாலும், பேரன்பினாலும் மட்டுமே அவ்வாறு கூறி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது முழுக்க முழுக்க அந்த எம்.எல்.ஏக்களின் தனிப்பட்ட விருப்பமே தவிர, கட்சியின் கூட்டு முடிவு அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வெங்கடரமணன், தவெகவின் உயர்மட்டத் தலைவர்களோ, பொதுச்செயலாளரோ அல்லது அமைச்சரவையில் உள்ளவர்களோ இதுகுறித்து எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், 2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் போதுதான் நாட்டின் பிரதமர் வேட்பாளர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், தற்போதைக்குத் தவெக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் மக்கள் பணிகளிலேயே முழுக் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in