LATEST NEWS
அய்யோ பாவம்… தாயின் உயிரைப் பறித்த புற்றுநோய்…! மன அழுத்தத்தில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..! 10 நிமிஷத்துல வர்றேன்ப்பா… எனக் கூறிச் சென்றவர் தண்டவாளத்தில் பிணமாக மீட்பு..! ஃபரிதாபாத்தில் நெஞ்சை பிழியும் சோகம்..!!
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் தாயின் மரணத்தால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக இளைஞர் ஒருவர் ஓடும் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இவரது தாய் புற்றுநோயால் உயிரிழந்ததை அடுத்து, அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். ரக்ஷா பந்தன் பண்டிகையன்று அவரது சகோதரி அவருக்கு ராக்கி கட்டியுள்ளார். அன்றைய நாள் முழுவதும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கழித்த அவர், மாலையில் தந்தைக்காக உணவைச் சமைத்துப் பரிமாறியுள்ளார்.
உணவு சாப்பிட்ட பிறகு, விஷ்ணு காலனியைச் சேர்ந்த 26 வயதான பிரவேஷ் என்ற அந்த இளைஞர், தான் சிறிது நேரத்தில் திரும்பி விடுவதாகக் கூறி தந்தையிடம் ரூ.100 வாங்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால், அவர் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், கவலையடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடத் தொடங்கினர். எனினும் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
அடுத்த நாள் காலையில், ரயில்வே போலீசாரிடமிருந்து குடும்பத்தினருக்கு ஒரு செய்தி கிடைத்தது. அதில், ரயிலில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த குடும்பத்தினர், இறந்தது பிரவேஷ் தான் என்பதை உறுதி செய்தனர். பிரவேஷின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்குப்பின் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ள ரயில்வே போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
