LATEST NEWS
பகீர்… நடுநதியில் திடீரென நின்ற இன்ஜின்… மரணத்தின் விளிம்பில் அலறித் துடித்த 15 ஹோம் கார்ட்டுகள்… இமைக்கும் நொடியில் மாறிய வாழ்க்கை…!நர்மதையில் நடந்த திக் திக் நிமிடங்கள்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள நர்மதை நதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஹோம் கார்ட் மோட்டார் படகின் இன்ஜின் திடீரென பழுதாகி நின்றதால், நதியின் பலத்த நீரோட்டத்தில் சிக்கி படகு மூழ்கியது. இந்தச் சம்பவம் கௌரிகாட் நர்மதை கரையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கச் சென்றபோது நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் படகில் ஹோம் கார்ட் பயிற்சியாளர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவைச் சேர்ந்த சுமார் 15 பேர் பயணம் செய்துள்ளனர். இன்ஜின் நின்றதும் நதியின் கடுமையான நீரோட்டத்தில் படகு அடித்துச் செல்லப்பட்டு மூழ்கத் தொடங்கிய நிலையில், அதன் நேரலை வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.
பர்ஃகி (Bargi) அணையின் 13 மதகுகள் திறந்து விடப்பட்டிருந்ததால் நர்மதை நதியில் நீர்வரத்தும் நீரோட்டத்தின் வேகமும் மிகவும் அதிகமாக இருந்தது. படகு கட்டுப்பாடு இன்றி அடித்துச் செல்லப்பட்டபோது, அதில் இருந்தவர்கள் ஆபத்தை உணர்ந்து உதவி கேட்டுச் சத்தமிட்டனர். இவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்ட அருகில் இருந்த 3 முதல் 4 உள்ளூர் படகோட்டிகள், உடனடியாகத் தங்கள் படகுகளுடன் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படகில் இருந்த அனைவரும் ‘லைஃப் ஜாக்கெட்’ (Life Jacket) அணிந்திருந்ததாலும், உள்ளூர் படகோட்டிகளின் சமயோசிதமான முயற்சியினாலும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு 15 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மோட்டார் படகை ஓட்டிய டிரைவர் மதுபோதையில் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் உண்மையிலேயே போதையில் இருந்தாரா என்பதை உறுதிப்படுத்த அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நதியில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் சூழலில் இந்த விபத்து நடந்திருப்பது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனிடையே, படகின் இன்ஜின் கோளாறு மற்றும் டிரைவரின் நிலை குறித்தும் ஹோம் கார்ட் மாவட்ட கமாண்டன்ட் நீரஜ் தாக்கூர் உட்பட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
