பரபரப்பு..! முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு… டெல்லி விமான நிலையத்தில் பிரவின் கணேசன் அதிரடி கைது..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பரபரப்பு..! முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு… டெல்லி விமான நிலையத்தில் பிரவின் கணேசன் அதிரடி கைது..!!

Published

on

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பிரவின் கணேசன் என்பவரை டெல்லி விமான நிலையத்தில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். முதலமைச்சருக்கு எதிராக இணையதளங்களில் தவறான தகவல்களையும் அவதூறுகளையும் பரப்பியதாகக் கூறி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில், குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்தச் சூழலில், தலைமறைவாக இருந்த பிரவின் கணேசன் டெல்லி ஏர்போர்ட்டில் இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். டெல்லி விமான நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்ட அவரிடம், இந்த அவதூறுப் பரப்புரையின் பின்னணி குறித்து சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in