உங்க ஓவர் கான்ஃபிடன்ஸுக்கு ஒரு அளவே இல்லையா..? மேட்சுக்கு முன்னாடியே டான்ஸ் ரீஹர்சல்…! பேட்டிங் பிராக்டீஸ் பண்ணியிருந்தாக்கூட 55 ரன்ல ஆல்-அவுட் ஆகியிருக்க மாட்டீங்க… பாகிஸ்தான் அணியை பங்கமாக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உங்க ஓவர் கான்ஃபிடன்ஸுக்கு ஒரு அளவே இல்லையா..? மேட்சுக்கு முன்னாடியே டான்ஸ் ரீஹர்சல்…! பேட்டிங் பிராக்டீஸ் பண்ணியிருந்தாக்கூட 55 ரன்ல ஆல்-அவுட் ஆகியிருக்க மாட்டீங்க… பாகிஸ்தான் அணியை பங்கமாக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்..!!

Published

on

துபாயில் நடைபெற்ற மகளிர்க்கான டி20 ஆசியக் கோப்பை 2026 போட்டியில், இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் மகளீர் கிரிக்கெட் அணி கொடூரமான தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, போட்டிக்கு முன்பாக அவர்கள் வெற்றி பெற்றால் எப்படி கொண்டாட வேண்டும் என்று பயிற்சி எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா இந்தியாவை வீழ்த்திய பிறகு எவ்வாறு வெற்றியைக் கொண்டாட வேண்டும் என்று சக வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிப்பதைக் காண முடிகிறது. ஆனால் களத்தில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்த நிலையில், அவர்கள் தயாரித்த கொண்டாட்டப் பயிற்சிக்கும் களத்தில் நடந்ததற்கும் இடையே உள்ள பெரும் முரண்பாட்டைச் சுட்டிக்காட்டி இணையவாசிகள் இந்த வீடியோவைப் பகிர்ந்து கலாய்த்து வருகின்றனர்.

இந்த வைரல் வீடியோவைப் பகிர்ந்த சமூக வலைதள பயனர் ஒருவர், “பேட்டிங்கிற்கு பயிற்சி எடுத்திருந்தால் 55/10 ரன்களில் ஆல்-அவுட் ஆகியிருக்க மாட்டார்கள்! இங்கு போட்டிக்கு முன்பாக டான்ஸ் மூவ்களும் வெற்றி கொண்டாட்டத்திற்கான ஒத்திகையும் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் பிட்சிற்குச் சென்றதும் முழு அணியும் சரிந்துவிட்டது. தன்னம்பிக்கை மிதமிஞ்சினால் அதற்குப் பெயர் தான் பாகிஸ்தான் கிரிக்கெட்” என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், இது போட்டோஷூட்டிற்கோ அல்லது ரீல்ஸிற்கோ செய்யப்பட்ட பயிற்சியாக இருந்தாலும் பாகிஸ்தானின் ஆட்டத்தைப் பார்க்கும்போது மிகவும் வேடிக்கையாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒருவர், “அவர்கள் எப்போதும் சமூக வலைதளங்களில் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்” என்று விமர்சித்துள்ளார்.

Advertisement

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த குரூப்-ஏ போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்திய ஸ்பின்னர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 18.1 ஓவர்களில் வெறும் 55 ரன்களுக்கு சுருண்டது. இது டி20 சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் மகளீர் அணியின் மிகக் குறைந்த ஸ்கோராகும். இந்திய தரப்பில் ஸ்ரீ சரணி மற்றும் பிரேமா ராவத் தலா 3 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 8.4 ஓவர்களிலேயே 57/3 ரன்கள் எடுத்து, 68 பந்துகள் மீதமிருந்த நிலையில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in