LATEST NEWS
VIRAL VIDEO: ஜிம்மை சுத்தம் செய்ய வந்த இடத்தில்… ரகசியமாக யாருக்கும் தெரியாமல் பெண் செய்த் காரியம்… சிசிடிவில் சிக்கிய அந்த காட்சி.. பாராட்டித்தள்ளும் இணையவாசிகள்..!!
உடற்பயிற்சிக் கூடத்தை சுத்தம் செய்ய வந்த ஏழைப் பெண் ஒருவர், தனது வேலைக்கு இடையே கிடைத்த இடைவெளியில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் காணொளி தற்பொழுது இணையதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. தான் உடற்பயிற்சி செய்வதை யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து, அவர் முழு ஆற்றலுடனும் அசாத்திய வேகத்துடனும் உழைத்த அனைத்து முயற்சிகளும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளன. அந்தப் பெண்ணின் அசாத்திய சுறுசுறுப்பும், உடற்பயிற்சியின் மீதான அவரது ஆர்வமும் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
https://twitter.com/RTVnewsnetwork/status/2096480687734055015/video/1
சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்தத் துடிப்பான காணொளி, பலரது பாராட்டுகளையும் இதயங்களையும் வென்று வருகிறது. தங்களுக்கு இருக்கும் வேலைப் பளு மற்றும் வறுமைக்கு இடையேயும், உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு முழு ஈடுபாட்டுடன் உடற்பயிற்சி செய்யும் அந்தப் பெண்ணின் விடாமுயற்சி பலருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகவும் உத்வேகமாகவும் அமைந்துள்ளது.
