LATEST NEWS
“EMI டைப்பில் கமிஷன்… கருணாநிதி பெயரைக் குறிப்பிட்டு அதிரடி..!” சட்டப்பேரவையில் ஆதாரங்களை உடைத்த முதல்வர் விஜய்.. பேரவையில் பெரும் பரபரப்பு..!!
தமிழக சட்டப்பேரவையில் திமுக மீது தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். பேரவையில் உரையாற்றிய அவர், “வங்கிக் கடனுக்கு மாதத்தவணை செலுத்துவது போல, திமுகவினர் டெண்டர்களில் தவணை முறையில் கமிஷன் வாங்கியிருக்கிறார்கள்” என்று மிகக் காரசாரமாகக் குற்றம்சாட்டினார். முதலமைச்சரின் இந்த அதிரடி பேச்சு சட்டப்பேரவை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், அரசு டெண்டர்களில் கட்டாயப்படுத்தி கமிஷன் பெறப்பட்டதாகத் தெரிவித்ததுடன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி குறித்து விசாரணை கமிஷன் அறிக்கையில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களையும் பேரவையில் சுட்டிக்காட்டினார். திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த ஆதாரங்கள் விசாரணை ஆணையத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
திமுகவினரின் கமிஷன் கலாச்சாரம் மற்றும் விசாரணை கமிஷன் அறிக்கையைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் முன்வைத்த இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சட்டப்பேரவையில் கடும் விவாதத்தையும், காரசாரமான விவாதத்தையும் உருவாக்கியது. முதலமைச்சரின் இந்த குற்றச்சாட்டு செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
