LATEST NEWS
“திமுக இடைதேர்தத்தில் புறக்கணிப்பு..?” உதயநிதி ஸ்டாலின் எடுத்த ‘அந்த’ அதிரடி முடிவு.. அறிவாலயத்தில் வெடித்த அனல் பறக்கும் விவாதம்…!!
தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த இரு தொகுதிகளுக்கும் முதற்கட்சியாக வேட்பாளர்களை அறிவித்து திமுக தனது தேர்தல் களம் இறங்கியுள்ளது. அதன்படி மதுராந்தகம் தொகுதியில் ஐ. பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் எஸ். சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்த தேர்தலைப் புறக்கணிக்கலாமா என திமுக தரப்பில் ஆலோசிக்கப்பட்டதாகவும், அப்படிச் செய்தால் தவெகவுக்கும் அதிமுகவுக்கும் மட்டுமே பிரதான போட்டி உருவாகும் நிலை ஏற்படும் என்றும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், தேர்தலை புறக்கணித்தால் கட்சிக்குத் தற்காலிகப் பின்னடைவு ஏற்படும் என்று கொந்தளித்த உதயநிதி ஸ்டாலின், புறக்கணிப்பு பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்த இடைத்தேர்தல் வியூகங்களின் முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டு, கட்சியில் உள்ள எதிர்ப்புகளைச் சமாளித்து, துணிச்சலாக இந்தத் தேர்தலை எதிர்கொள்ள அவர் முடிவு செய்துள்ளார். திமுக, தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலில் தங்களின் பலத்தை நிரூபித்து வெற்றியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், தற்போதைய தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
