LATEST NEWS
எங்களுக்காவது மக்கள் பிச்சை போட்டாங்க.. ஆனா உங்களுக்கு என்ன போட்டாங்க… மு.க.ஸ்டாலினை நேரடியாகச் சீண்டிய துரை வைகோ..!!
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் எம்பியான மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, தனது நாடாளுமன்றப் பதவி “திமுக போட்ட பிச்சை” என்ற விமர்சனத்திற்குச் செய்தியாளர்கள் சந்திப்பில் மிகவும் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார். திமுகவினர் சமூக வலைத்தளங்களில் தன்னை விமர்சிப்பது குறித்துப் பேசிய அவர், தனக்குக் கிடைத்தது கூட்டணி கட்சிகளுடனும் திமுக உடன்பாட்டுடனும் மக்கள் வாக்குக் கேட்டுப் பெற்ற “வாக்கு பிச்சை” என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், “எங்களுக்காவது மக்கள் வாக்கு பிச்சை போட்டார்கள், ஆனால் அவங்களுக்கு மக்கள் அந்தப் பிச்சையைக் கூட போடவில்லையே” என்று மு.க.ஸ்டாலினை நேரடியாகச் சீண்டிப் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய துரை வைகோ, மிசா காலத்தில் மு.க.ஸ்டாலின் சிறைக்குச் சென்ற விவகாரம் குறித்தும் தனது கடுமையான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். அவர் மிசா சட்டத்தில் கைதானது உண்மைதான் என்றாலும், அது தூய்மையான அரசியல் காரணங்களுக்காக மட்டுமே 100 சதவீதம் கிடையாது என்று அடித்துக் கூறியுள்ளார். தமிழக அரசியல் களம் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கிடையேயான இந்த வார்த்தைப் போர், திமுக மற்றும் மதிமுக தொண்டர்களிடையே தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு பெரிய விவாதப் பொருளாக மாறி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
