LATEST NEWS
நீங்கதான் நடிக்கிறீங்க… கடவுள் விநாயகரையும் நடிக்க வெச்சீராதீங்க.. தவெகவினர் மீது செம டென்ஷன் ஆன தமிழிசை…!!
பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா வழிபாடுகளில் கலந்து கொண்டபோது, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் சில செயல்களால் பெரும் அதிருப்தி அடைந்துள்ளார். சென்னையில் சில இடங்களில் தவெக தொண்டர்கள் முதலமைச்சர் விஜய் போன்ற பல்வேறு தோற்றங்களிலும், சைகை காட்டும் வகையிலும் விநாயகர் சிலைகளை வடிவமைத்து வழிபாட்டிற்கு வைத்திருந்தனர். இறைவனை இப்படி ஒரு சினிமா நடிகரின் அல்லது அரசியல் தலைவரின் பாணியில் சித்தரித்திருப்பது ஆன்மீக உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது என அவர் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
இந்தச் சிலைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து நீங்கதான் நிஜ வாழ்க்கையிலும் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள், தயவுசெய்து கடவுளான விநாயகரையும் அப்படி நடிக்க வைத்து விடாதீர்கள்” எனத் தொண்டர்களின் செயலைக் கடுமையாகச் சாடினார். ஆன்மீகக் கொண்டாட்டங்களை அரசியல் சுயவிளம்பரத்திற்காகப் பயன்படுத்துவது ஆரோக்கியமான அரசியல் அல்ல என்றும், வழிபாட்டு முறைகளில் இத்தகைய சினிமாத்தனங்களைப் புகுத்துவதைத் தவெக தொண்டர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் அப்செட்டுடன் கண்டித்துள்ளார்.
