LATEST NEWS
WHO IS HE-ஆ..? நான் கையெழுத்து போடலன்னா நீங்க ராஜ்யசபா எம்.பி. ஆகியிருப்பீங்களா..? பிரவீன் சக்ரவர்த்திக்கு செல்வப்பெருந்தகை கொடுத்த மரண அடி பதிலடி..!
தமிழ்நாடு காங்கிரஸில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்பான கருத்து மோதல்கள், தற்போது மிகத்தீவிரமான வார்த்தைப் போராக வெடித்துள்ளன. அண்மையில் நடைபெற்ற கூட்டணி குறித்த விவாதங்களின் போது, காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்ரவர்த்தி, “கூட்டணி குறித்துப் பேச செல்வப்பெருந்தகை யார்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரான கே. செல்வப்பெருந்தகை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கடுமையான சாடல்களுடன் கூடிய விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
செல்வப்பெருந்தகை தனது பதிவில், பிரவீன் சக்ரவர்த்தியை “அறிவுஜீவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர்” என விமர்சித்துள்ளார். மாண்புமிகு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்காத எவரோடும் ஏன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற தனது நியாயமான கேள்விக்கு, மேட்டுக்குடி மனநிலையுடன் பதில் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “நான் கூட்டணிப் படிவத்தில் கையெழுத்துப் போடாமல் இருந்திருந்தால் உங்களால் ராஜ்யசபா எம்.பி.-ஆக ஆகியிருக்க முடியுமா? திருப்பி கேட்கவா?” என்று மிகவும் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
உழைக்காமல் எளிதாகக் கிடைத்த பதவிகளை அனுபவிப்பவர்களுக்கு, அடிமட்டத்திலிருந்து உழைத்து இயக்கத்தை வளர்ப்பதன் கஷ்டம் தெரியாது என்றும் செல்வப்பெருந்தகை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் பேரியக்கம் தனிநபர்களை விடவும் பெரியது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், தான் என்றென்றும் சுயமரியாதையுடன் வாழும் இந்த மண்ணின் மைந்தன் என்றும், ராகுல் காந்தியைப் பிரதமராக்க விரும்பும் ஒரு உண்மையான தொண்டன் என்றும் தனது பதிலை ஆக்ரோஷமாகப் பதிவு செய்துள்ளார். இவர்களது இந்த நேரடி மோதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
