LATEST NEWS
அதிர்ச்சி..! விநாயகர் சிலை ஊர்வலம் மீது 7-வது மாடியில் இருந்து வீசப்பட்ட இறைச்சி துண்டுகள் – 3 பேர் அதிரடி கைது..!!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் மீது இறைச்சி துண்டுகள் வீசப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டு, அதன் நிறைவாக சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வரும் வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது.
ஐதராபாத்தின் மண்டனபேட் பகுதியில் நேற்று இரவு விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து விநாயகர் சிலைக்கு நேராக இறைச்சி மற்றும் எலும்பு துண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊர்வலத்தில் இருந்த பக்தர்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
புகாரின் பேரில் விரைந்து வந்து விசாரணை நடத்திய போலீசார், இந்த செயலில் ஈடுபட்ட இம்ரான் குரேஷி, அர்ஷியா பேகம், மற்றும் சபீனா ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த அசம்பாவித சம்பவத்தால் அப்பகுதியில் தற்காலிகமாக பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
