LATEST NEWS
“அப்படியென்றால் செப்.8 அரசாணை எதற்கு..?” புதிய தலைமைச் செயலக விவகாரத்தில் தவெக-வை வளைத்துப் பிடித்த கனிமொழி எம்பி.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முதலமைச்சர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என தவெக அமைச்சர் கூறுவது அப்பட்டமான பொய் என்றும், அப்படியானால் செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எதற்கு என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மிகக் கடுமையான வினாவை எழுப்பியுள்ளார். முதலமைச்சரின் ஒப்புதல் மற்றும் அறிவுறுத்தல் இல்லாமலேயே அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்பட்டு 25.55 ஏக்கர் அரசு நிலத்தை அடையாளம் கண்டார்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை உடனடியாகத் தயாரிக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டது யார் என்றும் அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கும் இந்தத் திட்டத்திற்கு எதிராகத் தவெக அரசு இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம் சாட்டிய கனிமொழி எம்பி, மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணான பொய்களைக் கூறி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாணை எண் மற்றும் முழு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ள நிலையில், முதலமைச்சருக்கே தெரியாமல் தவெக ஆட்சியில் திரைமறைவில் இயங்கும் அந்த “Super CM” சக்தி எது என்பதை விஜய் மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
