ஐயோ கடவுளே..! டீ குடிக்க தான் போனாங்க… எமனாக திடீரென பாய்ந்து வந்த லாரி… சம்பவ இடத்திலேயே 2 பேர் துடிதுடிக்க பலி… பதறவைக்கும் காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஐயோ கடவுளே..! டீ குடிக்க தான் போனாங்க… எமனாக திடீரென பாய்ந்து வந்த லாரி… சம்பவ இடத்திலேயே 2 பேர் துடிதுடிக்க பலி… பதறவைக்கும் காட்சி..!!

Published

on

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் மோர்பி சாலையில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் ஆட்டோ மீது பயங்கரமாக மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புதன்கிழமை இரவு 9:30 மணியளவில் ஹடாலா கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டல் முன்பாக இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நெஞ்சைப் பதறவைக்கும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகிப் பார்ப்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி சாலையோரம் நின்றிருந்த ஸ்விஃப்ட் கார் மற்றும் ஆட்டோ மீது மோதிய வேகத்தில், ஆட்டோவில் பயணித்த பாவ்நகர் சாலையைச் சேர்ந்த அஜீஸ்ஷா ஜிலுஷா ஷாமதார் (45) மற்றும் மாதாபர் கிராமத்தைச் சேர்ந்த கானோ ஹம்பல் (20) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பலியான அஜீஸ்ஷா, தனது மகனுடன் ஒரு மத வழிபாட்டு நிகழ்விற்காக ஆட்டோவில் சென்றபோது மகனின் கண் முன்னாலேயே உயிரிழந்துள்ளார். மற்றொரு பலியான இளைஞரான கானோ, சௌராஷ்டிரா நாட்டுப்புறப் பாடகி மீரா அகிரின் ஒரே தம்பி ஆவார். இவர் நண்பர்களுடன் டீ குடிக்கச் சென்றபோது இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

Advertisement

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் உடனடியாக வண்டியை நிறுத்தாமல் தப்பியோடி, டங்காரா பகுதிக்கு அருகில் லாரியைக் கைவிட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த குவாத்வா போலீசார் லாரியைப் பறிமுதல் செய்து, விபத்தில் பலியானவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in