“ஐயோ ஓடுது ஓடுது…!” விமானம் லேண்ட் ஆனப்போ சக்கரம் கழன்ற அடுத்த நொடி.. பைலட் செய்த அந்த ஒரு காரியம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ ஓடுது ஓடுது…!” விமானம் லேண்ட் ஆனப்போ சக்கரம் கழன்ற அடுத்த நொடி.. பைலட் செய்த அந்த ஒரு காரியம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

நேபாள நாட்டின் டோல்பா மாவட்டத்தில் உள்ள ஜுஃபாலா விமான நிலையத்தில், நேற்று காலை தரையிறங்கிய ‘சீதா ஏர்’ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தின் பின்பக்க வலது சக்கரம் கழன்று ஓடிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நேபாள்கஞ்ச் என்ற இடத்திலிருந்து 13 பயணிகள் மற்றும் 3 பணியாளர்கள் என மொத்தம் 16 பேருடன் புறப்பட்ட இந்த விமானம், காலை 8:25 மணியளவில் ஜுஃபாலா விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்கிய போது இந்த விபரீதம் நிகழ்ந்தது. விமானத்தில் பயணித்தவர்களில் 7 பேர் வெளிநாட்டுப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானத்தின் சக்கரம் கழன்ற அடுத்த கணமே, சாதுரியமாகச் செயல்பட்ட விமான ஓட்டி உடனடியாக இன்ஜினை முழுமையாக நிறுத்தினார்; இதனால் ஓடுதளத்தின் நடுவிலேயே விமானம் பத்திரமாக வந்து நின்றது. விமானியின் இந்தச் சமயோசித செயலால், விமானத்தில் இருந்த 16 பேரும் எவ்விதக் காயமுமின்றி நல்வாய்ப்பாகப் உயிர் தப்பினர். ஓடுதளத்தின் நடுவே நின்று கொண்டிருக்கும் அந்த விமானத்தை அகற்றிப் பழுதுபார்ப்பதற்காகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த அவசரப் பணிகள் காரணமாக, ஜுஃபாலா விமான நிலையத்தின் அனைத்து விமானச் சேவைகளும் தற்காலிகமாக முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in