ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி… தினம் தினம் ஆபாச நதி ஓட விடுறாங்க… திமுகவை கிழித்தெடுத்த முதல்வர் விஜய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி… தினம் தினம் ஆபாச நதி ஓட விடுறாங்க… திமுகவை கிழித்தெடுத்த முதல்வர் விஜய்..!!

Published

on

தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான சி. ஜோசப் விஜய் , மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் இன்று தனது கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார் . “என்னுடைய சொந்தங்களே, உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி” என உணர்ச்சிப்பொங்கத் தனது உரையைத் தொடங்கிய அவர், இன்று தான் ஒரு முதலமைச்சராக இங்கு வரவில்லை என்றும், இந்த இடைத்தேர்தலில் உங்களிடம் வாக்கு கேட்டு வரும் உங்கள் வீட்டுப் பிள்ளையாக வந்திருக்கிறேன் என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டார். மேலும், “உங்கள் வீட்டுப் பிள்ளை நான் ஆட்சிக்கு வரக்கூடாதா?” என்ற கேள்வியை மக்கள் மத்தியில் முன்வைத்து வாக்குகளைச் சேகரித்தார்.

தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சியான திமுகவை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். “ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி” என்று முழங்கிய அவர், தவெகவின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் தினம் தினம் தங்களைப் பற்றி திமுகவினர் ஆபாச நதியை ஓட விடுகிறார்கள் என்று நேரடியாகக் குற்றம் சாட்டினார். மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரைப் பற்றிப் பொதுவெளியில் அவதூறாகப் பேசியவர் மு.க.ஸ்டாலின் தான் என்று குறிப்பிட்டு, திமுகவின் அரசியல் நாகரிகமற்றப் போக்கைக் கடுமையாகச் சாடினார்.

Advertisement

தான் கடந்து வந்த பாதையைத் தொண்டர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்ட விஜய், தான் சினிமாவிலும் சரி, தற்போதைய அரசியல் பயணத்திலும் சரி, இந்த அளவுக்குப் பிரம்மாண்ட வெற்றிகளைப் பெற்றதற்குத் தன் மீது மாறாத அன்பு கொண்ட பொதுமக்களும் தன் சொந்தங்களுமே முக்கியக் காரணம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மிகக் பலத்தப் பாதுகாப்பு மற்றும் கியூஆர் குறியீடு (QR Code) நுழைவுச்சீட்டு முறைகளுடன் மதுராந்தகம் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே நடைபெற்ற இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்ட உரை, தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in